Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

“பெண்களுக்கு அதிக பாதுகாப்புகளை வழங்கும் அரசு தமிழக அரசு” – திருச்சியில் தேர்தல் பரப்புரையில் முதல்வர்

திருச்சியில் 2ம் நாளாக தேர்தல் பரப்புரையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கினார்.

Advertisement

அங்கு முதல்வர் பேசுகையில்…”ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை செய்து சாதனை புரிந்துள்ளார். தமிழகத்தின் முன் மாதிரி சட்டமன்ற தொகுதியாக விளங்கிவருகிறது. அவரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்து தமிழக முதல்வர் ஆக்கிய பெருமை ஸ்ரீரங்கம் தொகுதி மக்களையே சாரும். மத்திய சட்டக்கல்லூரி, தமிழ்நாடு காகித நிறுவன தொழிற்சாலை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். தற்பொழுது 2018ஆம் ஆண்டு வெள்ளத்தால் உடைந்த முக்கொம்பு கொள்ளிடம் கதவணை புதிய கட்டுமானப் பணிகள் இன்னும் மூன்று மாதங்களில் நிறைவு பெறும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்ரீரங்கம் தேர்தல் வாக்கு சேகரிப்பில் குறிப்பிட்டார். கொட்டும் மழையிலும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் முதல்வரின் தேர்தல் பரப்புரைக்கு காத்திருந்தனர்.

மணப்பாறை மொண்டிப்பட்டியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு காகித தொழிற்சாலை நிறுவனத்தின் மேலும் 2ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய திட்ட மதிப்பீடு உருவாக்கம் செய்து உள்ளதாக குறிப்பிட்டார். இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்பு திருச்சி சோமரசம்பேட்டை தேர்தல் பரப்புரையில் சுய உதவிக் குழுக்களை சந்தித்துப் பேசினார்.

Advertisement

“மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.பெண்கள் வாழ்வில் அனைத்தும் பெற்று முன்னேற வேண்டும் என அரும்பாடு பட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கிய திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். பெண்களுக்காண எண்ணற்ற திட்டங்களை கொடுத்தவர் அம்மா.கொரோனோ காலத்திலும் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகளையும் செய்தது ஜெயலலிதா அரசு பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். பெண்களுக்கு அதிக பாதுகாப்புகளை வழங்கும் அரசு தமிழக அரசு” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *