திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு புதிய இரு சக்கர வாகனம் வாங்க ஒரு நபருக்கு ஒரு வாகனத்திற்கு ரூ. 25,000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
இரு சக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய Gearless / Auto gear உள்ள எஞ்சின் 125சிசி சக்திக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அரசின் மானிய விலைக்கு கூடுதல் செலவினம் ஏற்படும் பட்சத்தில் இத்தொகையினை பயனாளியே செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :
1). வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் மனுதாரர் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
2) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
3) வயது 18 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
4) விண்ணப்பிக்கும்போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுரைக்கான சான்றிதழ் (LLR) பெற்றிருத்தல் வேண்டும்.
5). கல்வி தகுதி ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
6). பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால் 1. பேஷ் இமாம் 2. அரபி ஆசிரியர்கள் 3. மோதினார்கள் 4. முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.
வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் / விலைப்புள்ளி மற்றும் சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் மாவட்ட ஆட்சியர் வளாக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து தகுதியுடைய உலமா பணியாளர்கள் பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments