திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேகமாக சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இம்முகாமை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம் கணேஷ் மருத்துவர் முகமது ஹக்கீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் இளைஞர்களை ஊக்கப்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள மனதளவில் தயார் செய்த பெருமைக்குரியவர் மருத்துவர் முகமது ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments