Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ரூ.1 இலட்சம் மானியம் பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் – திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேளாண்மைத் துறை மூலம் (2024-25)-ம் ஆண்டிற்கான மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்கி தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்திற்கு ரூ.1 இலட்சம் மானியம் வேளாண்மைத் துறை மூலமாக வழங்கப்படுகிறது.

தற்பொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மைபொறியியல் பட்டம் பெற்ற 21 வயதுமுதல் 40 வயதுக்குட்டபட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இல்லாத சிறந்த கணினி புலமையுள்ள வேளாண்மை தொடர்புடைய செயலிகளை பயன்படுத்தும் திறனுள்ள பட்டதாரிகள் 3 நபர்கள் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட அரசாணை பெறப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனாளி தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவுபதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) / வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் (AIF) கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும்.இதற்கு உட்கட்டமைப்பு நீங்கலாக அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

எனவே, வேளாண்மை தொழில் முனைவோராக செயல்பட தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 10 மற்றும் 12-ம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ், வேளாண்மை / தோட்டக்கலை / வேளாண் பொறியியல் பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ், துவங்க உத்தேசித்துள்ள தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை,ஆதார் நகல், குடும்ப அட்டை நகல்,வங்கி கணக்கு நகல் மற்றும் வங்கியில் கடனுதவி பெற்று திட்டம் தொடங்குபவர் எனில் அதற்கான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களையும், விரிவான திட்ட அறிக்கையையும் அக்ரிஸ்நெட் (www.tnagriset.gov.in) வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூடுதல் விவரங்களை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *