திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் நடராஜனின் பேத்தி உத்ராவுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல், வேடமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் மூத்த தலைவர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக மகன், மகள் போன்றவர்கள் களத்தில் இறங்கி தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக அமைச்சர் நடராஜன் போட்டியிடுகிறார். தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடராஜனின் பேத்தி உத்ராவை பிரச்சார வேனில் ஏற்றியுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் நடராஜனின் மகன் ஜவகரின் மகள் உத்ரா.
4ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் வேடமிட்டு, திறந்த வேனில் மைக்கை பிடித்து பிரச்சாரம் செய்ய வைத்துள்ளனர்.
மழலை பேச்சு மாறாத சிறுமிக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஜெ.ஜெயலலிதாவாகிய நான்.
மக்களால் நான்; மக்களுக்காக நான், நீங்கள் செய்வீர்களா?
என்பன பிரபலமான வாசகங்களை , பேசுவதற்கு பயிற்சியளித்து, பிரச்சாரம் செய்ய வைத்துள்ளனர்.
வெல்லமண்டி நடராஜனுக்கு ஓட்டுப் போடுங்கள் என மழலை பேச்சில் வாக்குகளை கேட்டார் அதேபோல் இரண்டு விரல்களை அசைத்து இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார்.
தாத்தா நடராஜனுக்கு ஆதரவாக, பேத்தி ஓட்டு சேகரித்த சம்பவம், தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது, என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறை மீறல் பட்டியலில் சேர்க்கப்படுமா? என கேள்வி எழுப்புகின்றனர். எதிர்க்கட்சியினர்.
கலை நிகழ்ச்சிகளில், சிறார்கள், தலைவர்கள் போல் வேடமணிவதோ, அவர்களை போல் பேசுவதோ தனித் திறமையாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், 10 வயது சிறுமிக்கு பயிற்சி கொடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது விதிமுறை மீறல் தானே என்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் தனது பேத்தியை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது குறித்து புகார் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments