தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த, குறைந்தபட்சம் 8th, 10th, ஐடிஐ, டிப்ளமோ, 12வது, பட்டப்படிப்பு பெற்ற இளைஞர்களுக்கு (ஆண் / பெண் இருபாலரும்) அவரவர்களின்
தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) மூலம் வருகின்ற (15.03.2023) அன்று கலையரங்கம், திருச்சியில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதால், திருச்சிராப்பள்ளி மாவட்டம் மற்றும் இதரப் பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் மேற்படி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறதன் விபரம் (Bio-Data), கல்வித்தகுதி, இருப்பிடச்சான்று, புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகலுடன் நேரில் வருகை தர வேண்டும்.
மேலும் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0431-2412726 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு மேற்படி வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களைப் பெறலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments