Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தனது உயிருக்கு ஆபத்து என்று கழுத்தில் சிலேட்டுடன் திருச்சி ஆட்சியரிடம் மூதாட்டி மனு – பரபரப்பு

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 82). இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் விதவையான இந்த மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரது மூன்றாவது மகள் கன்னிகாகுமாரி திருமணம் செய்ததால் வீடு கிடைக்கவில்லை என்று அழுது வீட்டில் தனியாக இருந்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த அந்த மூதாட்டி தினமும் கடையில் உணவு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். 

மேலும் வீட்டில் சமைக்கும் உணவு எதையும் மகள் கொடுக்கவில்லை எனவும் கூறுகிறார். வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் பணத்தை மாற்று சாவி போட்டு திருடிக் கொள்வதாகவும், கேட்டால் தன்னை அடிப்பதாகவும் மூதாட்டி தெரிவித்தார். மேலும் தன்னை தலையில் கல்லை போட்டு சாகடித்து விடுவதாகவும் மிரட்டுகிறார். மருமகன் குடித்துவிட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறினார்.

மேலும் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுவிட்டு உன் மகன் மகளிடம் இறந்துவிட்டதாக கூறி விடுவோம் என்று மகளும், மருமகனும் கூறி என்னை கொலை செய்ய முயற்சி செய்ய வந்தார்கள் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை .

எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. போலீஸ் புகார் செய்த நகல் மற்றும் வழக்கறிஞர்களிடம் புகார் செய்த மனுவை இணைத்து உள்ளேன். என் வீட்டிலிருந்து மகளையும், மருமகளையும் வெளியேற்றிவிட்டு எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

82 வயதில் நடக்க முடியாமல் தள்ளாடி தனது கழுத்தில் சிலேட்டுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்த போது ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *