திருச்சி மாவட்டம் துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள எட்டுக்கை மாரியம்மன் கோவில் அருகே திருச்சி புவியியல் மற்றும் சுரங்க துறையின் மண்டல பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றினை தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுரங்க துறையினர் லாரியின் மேலே ஏறி, லாரியை சோதனையிட்டதில் சுமார் மூன்று கன மீட்டர் அளவுள்ள கிராவல் மண்ணை, அரசின் உரிய அனுமதியின்றி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், லாரியை துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக உதவி புவியியலாளர் மதன்ராஜ் (26) அளித்த புகாரின் பேரில், துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியின் உரிமையாளர் மற்றும் தப்பிச்சென்ற லாரி டிரைவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments