திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் அரசன் மளிகை ஸ்டோர் உள்ளது. இக்கடையின் உரிமையாளர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு மீண்டும் மறுநாள் காலையில் கடையை வந்து பார்த்த பொழுது காலையின் பூட்டு அறுக்கப்பட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது பண பெட்டியல் வைத்திருந்த 27 ஆயிரம் ரூபாய் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடிய ஸ்ரீரங்கம் பகுதியில் பிரபலமான மளிகை கடையில் திருட்டு நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments