தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4 (டி. என்.பி.எஸ்.சி. குரூப்-4) போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 10:00 மணி முதல் பகல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது. மாதிரித்தேர்வில் முழு பாட பகுதி களில் இருந்து வினாக்கள் இடம் பெறும்.
மாதிரி தேர்வை தொடர்ந்து திருப்புதல் வகுப்பு நடைபெறும். மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதில ளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும். மாதிரி தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண்களை அதிகப்படுத்துவதற்கு அறிவுரைகளும், வழி முறைகளும் வழங்கப்படும்.
அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ – மாணவிகள் தேர்வில் கலந்துக் கொண்டு பயனடைய வேண்டும் என்று மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments