திருச்சி மாநகரில் இக்பால் காலணி அருகே முடுக்குப்பட்டி சாலை பகுதியில் மதுபான பார் ஒன்று உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபான கடையில் அதிக கூட்டமாக இருந்தது. மேலும் நாளை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு விடுமுறை என்பதால் காலை முதலே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் மாலை மது அருந்துவதில் இரு தரப்பிற்கு தகராறு ஏற்பட்டது என கூறப்படுகிறது. அப்போது முடுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த பன்னீர் (42) இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்த நிலையில் தற்போது சென்ட்ரிங் பணிக்கு சென்று வருகிறார். அவர் மதுபான பாரில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, மதுபான பாரில் தகராறில் ஈடுபட்ட நபர்கள் பன்னீரின் தலையில் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த பன்னீர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உடன் வந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், உடலை கைபற்றிய கண்டோண்மென்ட் போலீசார்
இறந்த பன்னீர் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டதா உள்ளிட்ட கோணங்களில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments