திருச்சி மாவட்டக் கைப்பந்து (Handball) சங்கத்துடன் திருச்சி செயின்ட். ஜான்’ஸ் வெஸ்டரி மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய வெஸ்ட்ரியன்ஸ் சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டி. 15வது ஆண்டு மாவட்ட அளவில் 15 வயதுக்கு உட்பட்ட சப் – ஜூனியர் மாணவ மாணவியருக்கான கைப்பந்து போட்டி செயின்ட் ஜான்’ஸ் வெஸ்டரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இதனை மண்டல முதுநிலை மேலாளர் பி. வேலுமுருகன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , திருச்சி, DR. வி.ராஜாமன்சிங், செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் மற்றும் திருச்சி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவர் SP. அண்ணாலை, துணைத் தலைவர்கள். பி.விக்னேஷ்வரன், எஸ்.கே. ஜெயந்தி தொடக்கிவைத்தார்கள்.
இரண்டாம் நாள் (03.02.2024) மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவர் SP. அண்ணாலை, துணைத் தலைவர்கள் பி.விக்னேஷ்வரன், எஸ்.கே. ஜெயந்தி வாழ்த்துரையைக் வழங்கினார்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் வி.பொற்கொடி , திருச்சி மாநகராட்சியின் கல்விக் குழுத் தலைவர், 63வது மாமன்ற உறுப்பினர் சிறப்புரை ஆற்றி வெற்றிப் பெற்ற அணியினருக்கு வெஸ்ட்ரியன்ஸ் சுழற்கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
திருச்சி மாவட்டக் கைப்பந்து சங்கத்தின், தலைவர் SP. அண்ணாலை, துணைத் தலைவர்கள் பி.விக்னேஷ்வரன், எஸ்.கே. ஜெயந்தி இவ்விழாவில் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர். இதில் 6 மாணவர் அணிகளும் , 6 மாணவி அணிகளும் கலந்து கொண்டனர். செயின்ட். ஜான்’ஸ் வெஸ்டரி மேல்நிலை பள்ளியின் தலைமை யாசிரியர் ஏ.சைமன் சுகுமார் வரவேற்றார். திருச்சி மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஆர்.கருணாகரன் நன்றியுரை வழங்கினார்.
மாணவர் அணி
1. முதலிடம் – எஸ்.பி.ஐ.ஓ.ஏ சி.பி.எஸ்.இ.மமேல்நிலைப்பள்ளி, திருச்சி.
2. இரண்டாமிடம் – அரசு உயர்நிலைப் பள்ளி கே.கே.நகர் திருச்சி .
3. மூன்றாமிடம் – சான்ட்டா மரியா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி திருச்சி
4. நான்காமிடம் – இராஜாஜி வித்யாலயா சி.பி.எஸ்.இ,பள்ளி, திருச்சி.
(சிறந்த விளையாட்டு வீரர் – R. K.ALDERICK (எஸ்.பி.ஐ.ஓ.ஏ சி.பி.எஸ்.இ. பள்ளி, திருச்சி)
(சிறந்த கோல்கீப்பர் – P. JEBARAJ (அரசு உயர்நிலைப் பள்ளி, கே.கே.நகர்)
(நம்பிக்கை வீரர் – MOHAMED ISHAAQ (அரசு உயர்நிலைப் பள்ளி கே.கே.நகர், திருச்சி)
மாணவிகள் அணி
1. முதலிடம் – சான்ட்டா மரியா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி திருச்சி.
2. இரண்டாமிடம் – எஸ்.பி.ஐ.ஓ.ஏ சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
3. மூன்றாமிடம் – இராஜாஜி வித்யாலயா சி.பி.எஸ்.இ, திருச்சி.
4. நான்காமிடம் – காவேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
(சிறந்த விளையாட்டு வீராங்கனை- V . DHARISANA ( இராஜாஜி வித்யாலயா சி.பி.எஸ்.இ, பள்ளி. திருச்சி)
(சிறந்த கோல்கீப்பர் – B. தன்ய தர்ஷினி (சான்ட்டா மரியா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி திருச்சி)
(நம்பிக்கை வீராங்கனை – R SHANMIKA (காவேரி மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி, திருச்சி ).
Comments