Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி ஸ்ரீ நம்பெருமாள் கற்பூர படிேயற்ற சேவை

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

அதன்படி கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்திருந்தனர். இதனை திருமலை தேவஸ்தான நிர்வாக குழு துணைத் தலைவர் திரு ரமேஷ் பாபு தலைமையில் எடுத்து வந்து ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து , பட்டாச்சார்யர்கள் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதில் ஸ்ரீரங்கம் கோவில் அலுவலர்கள், திருப்பதி தேவசம்போர்டு அதிகாரிகள், அறநிலையதுறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பதியில் இருந்து நம்பெருமாளுக்கு 365 நாட்களுக்கான வஸ்திர மரியாதை வழங்கப்பட்டுள்ளது. நம்பெருமாள் கைசிக ஏகாதசி திருநாள் நிகழ்வை முன்னிட்டு புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் நம் பெருமாளுக்கு 365 பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

இதனையடுத்து இன்று (16.11.2021) ஸ்ரீ நம்பெருமாள் கற்பூர படிேயற்ற சேவை நடைபெற்றது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *