திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் 31 சவரன் நகை அடங்கிய கைப்பையை தவறவிட்டார். இதனை கண்டெடுத்த திருச்சி ரயில்வே அஞ்சலகத்தில் பணிபுரியும் கிஷோர் குமார் என்பவர் திருச்சி ரெயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதனையொட்டி திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் படி அந்த நகை பை உரியவர்களிடம் வழங்கப்பட்டது. நேர்மையாக நடந்து கொண்ட கிஷோர் குமாரின் செயலை பாராட்டி அவருக்கும் நற்சான்று வழங்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments