2002-ம் ஆண்டு பிறந்த அகிலா யானையானது கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது திருக்கோவில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காக திருவாணைக்காவல் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அகிலாவிற்கு இன்று 22-வது வயதை எட்டும் நிலையில் திருக்கோவில் சார்பில் யானைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோவில் யானை அகிலா அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டது.
பின்னர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் யானைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்ற யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடி பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர்.
பக்தர்கள் ஒருசேர பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர் அதனை ஏற்றுக் கொண்டு தும்பிக்கையை ஆட்டி தனது நன்றியைத் தெரிவித்தது அதனைப் பார்க்க வந்த அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments