Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

23 ஆண்டுகளாக உணவளிக்கும் உள்ளம்

ஸ்ரீரங்கத்தில் நாளை (29.04.2022) சித்திரைத் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து நடைபயணமாகவும், வாகனங்களிலும் வந்து ஸ்ரீரங்கத்தில் கூடிவிட்டனர்.

இவர்கள் அனைவரும் கிராமப்புறத்தில் உள்ளவர்கள். நம்பெருமாளை தரிப்பதற்காக முன்பெல்லாம் மாட்டு வண்டிகளை கட்டிக் கொண்டு வந்து இங்கு உள்ள தோப்புகளில்  தங்குவார்கள்.

ஆனால் தற்போது இவை அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி விட்டது. இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பது என்பது மிகவும்  சிரமமாக இருந்தது. 23 வருடங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு சிறு குழந்தை உணவு கிடைக்காமல் கிடைத்த ஏதோ ஒரு உணவை சாப்பிட்டு வயிற்று வலியால் துடித்து உள்ளது.

இதை பார்த்த பாலாஜி என்பவருக்கு தோன்றியது தான் இந்த எண்ணம். ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை திருவிழாவிற்கு முதல்நாள் வந்து தங்கும் பக்தர்களுக்கு இரவு வகைவகையான ருசியான உணவு சமைத்துப் போடுவது என முடிவு செய்தார்.23 ஆண்டுகளாக பத்து வகையான உணவுகளை சமைத்து 3,500 பேருக்கு வயிறார போதும் என்ற அளவுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்.

சாம்பார் சாதம், தயிர் சாதம், குஸ்கா, கிரீன்பீஸ், மேங்கோ ரைஸ், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி, புளி சாதம் உள்ளிட்டவைகளை 25க்கும் மேற்பட்ட சமையல் கலை வல்லுனர்கள் வைத்து சமைத்து உணவளிக்கிறார்.

அனைவருக்கும் பாக்கு மட்டையில் உணவுடன் குடிநீருடன் உணவு கொடுத்து வருகிறார். அதற்கு 50 பேர் நண்பர்கள் உடனிருந்து சேவை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் உணவருந்திவிட்டு இந்த சித்திரை தேரோடும் வீதிகளில் உறங்கி காலை நடைபெறும் சித்திரை தேர் திருவிழாவில் நம்பெருமாள் தரிசனம் செய்ய காத்துக் கொண்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *