வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் பத்தாளப்பேட்டை ஊராட்சியில் கீழமங்கலம் ரயில்வேகேட் அருகே வசித்து வந்த மாரியம்மாள் என்பவரது வீட்டின் மீது அருகில் உள்ள ஆலமரம் விழுந்தது. இதில் வீடு பலத்த சேதமடைந்தது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும் ஆல மரம் விழுந்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதுபற்றி தகவல் அறிந்து வந்த துவாக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஞானவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். இதனையடுத்து கிராம மக்கள் உதவியுடன் ஆலமரம் வெட்டி அகற்றப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments