திருச்சி மாவட்டம் தொட்டியம் போலீசரகத்திற்கு உள்பட்ட பாப்பாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜெகன்(15). ள்ளியை சுத்தம் செய்த போது தவறுதலாக தலைமை ஆசிரியர் கார் மீது விளக்கமாறு விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் சந்திரமோகன் மாணவனை தாக்கியதில் மாணவனுக்கு கை எலும்பு ஜவ்வு பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்ட மாணவன் முன்னதாக மாணவன் முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்பு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் குறித்து மாணவனின் தந்தை செல்வராஜ் தொட்டியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகர் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை ஆசிரியர் சந்திரமோகன் மீது 296 B – கெட்ட வார்த்தையால் திட்டுவது, 118 -பெரம்பால் அடித்தது, 351 (11) மிரட்ட விடுத்தது, 75 – சிறுவன் என்றும் பாராமல் அடித்தது ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments