நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் குறித்து சமீபத்தில் பாஜக மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா விமர்சித்திருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்புகார் அளித்த துரைமுருகன் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் வயலூர் சாலையிலுள்ள வாசன் வேலியிலுள்ள திருச்சி சூர்யாவின் இல்லத்திற்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments