திருச்சி மாநகர் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்ப சலனம் காரணமாக தென் வட கடலோர டெல்டா மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் பகுதிகளான துறையூர், மணப்பாறை, சமயபுரம், லால்குடி மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்தது. இதனால் மாநகர சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments