Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

குறிச்சு வச்சுக்கங்க… ஜனவரியில் Q3 முடிவுகளை அறிவிக்கும் எட்டு நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. மூன்றாம் காலாண்டு என்பது 2023-24 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டமாகும்.

G M Breweries Ltd : ஜனவரி 4, 2024 : G M ப்ரூவரீஸ் லிமிடெட் நாட்டு மதுபானம் (CL) மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் (IMFL) போன்ற மதுபானங்களை தயாரித்து விநியோகம் செய்கிறது. வணிக நிதிநிலைகளை ஆய்வு செய்தால், இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூபாய் 152 கோடியாகவும், அதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூபாய் 22 கோடியாகவும் இருந்தது தற்பொழுது மூன்றாவது காலாண்டு முடிவை அறிவிக்க இருக்கிறது.

HDFC Asset Management Company Ltd : ஜனவரி 11ம் தேதியன்று முடிவுகளை அறிவிக்கிறது, வணிக நிதிநிலைகளை ஆய்வு செய்தால், இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூபாய் 643 கோடியாகவும், அதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூபாய் 438 கோடியாகவும் இருந்தது. HDFC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் HDFC மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மாற்று முதலீட்டு நிதிகளுக்கான சொத்துக்களை நிர்வகிக்கிறது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு போர்ட்ஃபோலியோ மேலாண்மை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. இதன் சந்தை மூலதனம் ரூபாய் 68,451.51 கோடி. பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் ரூபாய் .3,223.50 ஆக முடிவடைந்தன, 

Infosys Ltd : ஜனவரி 11, 2024 அன்று முடிவுகளை அறிவிக்கிறது, இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆலோசனை, தொழில்நுட்பம், அவுட்சோர்சிங் மற்றும் அடுத்த தலைமுறை டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது, இது வணிகங்களுக்கு டிஜிட்டல் மாற்ற முயற்சிகளையும் செயல்படுத்த உதவுகிறது. சந்தை மூலதனம் ரூபாய் 6.40 லட்சம் கோடியாக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் பங்குகள் ரூபாய் .1,551.35 என முடிவடைந்தன, நிதி நிலைகளை பொறுத்தவரை, இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூபாய் 38,994 கோடியாகவும், அதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூபாய் 6,215 கோடியாகவும் இருந்தது.

இதேபோல, HCL Technologies Ltd ஜனவரி 12, தேதி, விப்ரோ லிமிடெட் ஜனவரி 12, தேதி, ஏஞ்சல் ஒன் லிமிடெட் ஜனவரி 15ம் தேதி Brightcom Group Ltd ஜனவரி 15ம் தேதி HDFC வங்கி லிமிடெட் ஜனவரி 16ம்தேதியும் முடிவுகளை அறிவிக்க இருக்கின்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *