திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவள்ளநல்லூர் வழியாக திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த பெருவள்ளநல்லூர் பகுதியை கடந்து பேருந்து, கார், லாரி இருசக்கர வாகனங்கள் என தினமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் செல்கிறது.
இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உயர் கோபுர விளம்பரப்பதாகை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விளம்பரம் பதாகை கிழிந்து அடிக்கும் காற்றில் காற்றில் ஆடி வருகிறது. இது தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் மின்னல் வேகத்தில் பறக்கும். எனவே தற்போது கிழிந்து தொங்கும் விளம்பர பதாகை பறந்து வந்து வாகனத்தின் மீது விழுந்தால் எங்கேயும் எப்போதும் பட பாணியில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக விளம்பரப்பதாகையினை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments