கொரோனா தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாணவர்களின் கைகளில் கைபேசி உள்ளது.
இதனால் ஆன்லைன் வகுப்பு முடித்த பின்னர் மாணவர்கள் அதிக நேரம் செல்போனில் ஃப்ரீ பையர் உள்ளிட்ட அபாயகரமான ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கிடையே சமூக விரோத எண்ணங்கள் அதிகரிக்கும் சூழல் உருவாகி படிப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இது போன்ற சமூக விரோத ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என இந்து இளைஞர் முன்னணி சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments