Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடிக்கும் சரித்திரப்பதிவேடு குற்றவாளி நன்னடத்தை உறுதிமொழி பிரமாணபத்திரத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுப்பட்டதால் 257 நாட்கள் சிறையில் அடைப்பு.

திருச்சி மாநகரம் பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி விமல்ராஜ் (23) த.பெ.ஆப்ராகம் ஜசக் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், மேற்படி ரவுடி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, பாலக்கரை காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி எதிரியை

நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி எதிரி விமல்ராஜ் தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி விமல்ராஜ் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி கத்திய காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் வழிப்பறி செய்தல் மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர்மீது பாலக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 28.04.22-ந்தேதி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி ரவுடி தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 257 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி ரவுடி விமல்ராஜ் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *