Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சரித்திர பதிவேடு ரவுடி கொலை – 6 பேர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி உட்கோட்டம். கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிக்க்ஷாண்டார்கோவில் பஞ்சாயத்து, நந்தா நகரில், ஸ்ரீரங்கம் சரித்திர பதிவேடு குற்றவாளி பரணிதரன் (35), த.பெ. ஜம்புநாதன், தெற்கு தெரு, மேல கொண்டையம்பேட்டை (ஸ்ரீரங்கம் ROWDY HS No.-18/14, Category. A) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேற்படி பரணிதரனும், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி (36). த.பெ. பால்ராஜ், பேரூர் அக்ரஹாரம், குழுமணி, திருச்சி (ஜீயபுரம் கா.நி-ROWDY HS No.. 404/22, Category-B) என்பவரும் சிறையில் இருந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மேற்படி சக்திவேலின் மனைவி ஆர்த்தி என்பவர் தொலைபேசி மற்றும் நேரில் பரணிதரனை அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட பரணிதரன் மேற்படி ஆர்த்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இது சக்திவேலிற்கு தெரியவரவே, மேற்படி சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி மேற்படி பரணிதரன் மீது முன்விரோதம் கொண்டு, பகைமை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், மேற்படி (1) சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி. (2) பார்த்திபன் (28), த.பெயாஸ்கரன், குழுமணி, திருச்சி, (3) தினேஸ்குமார் (எ) பொக்கைவாய் தினேஸ் (25), மன்னார்சாமி, சிந்தாமணி, திருச்சி, (4) கோபாலகிருஷ்ணன் (35), த.பெ. காசிநாதன், பாச்சூர், மணச்சநல்லூர்,

(5) தினேஸ்குமார் (எ) மயில் தினேஸ் (24), த.பெ. மயில்ராஜ். மேலசிந்தாமணி, திருச்சி மற்றும்  (6) முகில்குமார் (எ) முகில் (30), த.பெ. சிவகுமார், சங்கரன் பிள்ளை சாலை, திருச்சி ஆகியோர்களுடன், (03.022024)-ஆம் தேதி, காலை 10:15 மணிக்கு, டாடா போஸ்ட், TN 48 AH 0724 என்ற எண்ணுள்ள காரில் வந்து, பரணிதரன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கொலையுண்டு இறந்துபோன பரணிதரனின் மனைவி பிரதீபா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கொள்ளிடம் கா.நி- குற்ற எண்- U/s 147, 148, 294(b), 449, 302 இதச-இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இன்றைய தினமே அனைத்து எதிரிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *