Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மத்திய மண்டலத்தில் கொலை சம்பவங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் – ஐஜி பேட்டி

திருச்சி அண்ணா விளையாட்ரங்கில் தமிழ்நாடு காவல்துறையின் 7 கோட்டங்களுக்கிடையான 61வது   விளையாட்டு போட்டிகள் போட்டிகள் இன்று துவங்கி உள்ளது .

இப்போட்டிகளின் துவக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது….
7 கோட்டங்களை சேர்ந்த காவல்துறையில் உள்ள தடகள வீரர்கள் ஒன்பது வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த வருடம் கோவிட் காரணமாக இந்த போட்டிகள் நடைபெறவில்லை.

தற்போது கோவிட் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் போட்டிகள் நடத்தப்படுகிறது. கொலை வழக்குகளை கடந்த வருடத்தில் ஒப்பிடும்போது 8 சதவீதம் குறைந்துள்ளது. கொலை சம்பவம் பூஜ்ஜியம் நிலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமத்தில் உள்ள சிறுவர்களை ஊக்குவிப்பதற்காக கல்வி கற்றல் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் புத்தகம் படிக்க வைப்பது, விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்ட காவல் சிறுவர் மன்றங்கள் உருவாக்கப்படும் எனவும் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் நடைபெறும் மூன்றாம் நாள் போட்டி முடிவில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்போட்டியின் துவக்க நிகழ்வில் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *