தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் தமிழ்நாடு தழுவிய அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த (22.01.2025) முதல் வாயில் முழக்கப் போராட்டம் உள்ளிறுப்பு போராட்டம் செய்து கொண்டுள்ளனர். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான
1) கடந்த ஒன்பது மாதமாக ஊதியம் வழங்காததை தமிழக அரசு உடனே தலையிட்டு ஊதியத்தை வழங்குக.
2) யுஜிசி நிர்ணயித்த ஊதியம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படியும் ரூபாய் 50,000 வழங்க வேண்டும்.
3) அனைத்து கௌர விரிவுரையாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்.
4) GO : 56 ஐ உடனே நடைமுறைப்படுத்துக
5) பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி சுமார் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. எனவே கௌரவ விரிவுரையாளர்களின் பிரச்சனைகளை சரி செய்திடுக.
மேற்கண்ட கோரிக்கைகளை வென்றெடுக்கும் விதமாக திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம் இன்று நடைபெற்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments