திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் 25 பெண், 15 ஆண் என 40 கெளரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களும் நிலுவைத் தொகை உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் ரூபாய் 20,000 மற்றும் மாதம் தவறாமல் ஊதியம் அனைத்தையும் வழங்கி வருகின்றன.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் மட்டும் அரசாணையை எந்த வகையிலும் பின்பற்றாமலும் நிலுவைத் தொகையை வழங்காமலும் உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியத்தையும் முழுமையாக வழங்காமல் பாரபட்சமாக வழங்கி வருவதுமாகவும் மாதா மாதம் ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.
ஆகையால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணி புரியும் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களும் ஒன்றிணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments