திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களம் ஊராட்சிக்குட்பட்ட முகில் நகர் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்ததால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி மழை நீர் முழங்கால் அளவு தேங்கின்றது.
இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு போக முடியாமலும் கடும் அவதிக்குள்ளாய் இருந்தனர். இந்தப் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களும் மழை நீரும் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வீடுகளுக்கு செல்வதற்கும் வெளியே வருவதற்கும் முழங்கால் அளவு நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து திருநடுங்களம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் நேற்று அப்பகுதி பொது மக்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன் உடனடியாக அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்து இன்று ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையின் குறுக்கே பள்ளங்களை தோண்டி சிமெண்ட் குழாய்களை பதித்து அப்பகுதியில் தேங்கி இருந்த மழை நீரை அப்புறப்படுத்தினார்.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருநெடுங்களம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமாருக்கே நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் இப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வடிகால் வசதி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments