திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், ஜமால் முகமது கல்லூரி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன் அமைப்பு, மெட்டாஸ்பேஸ் சொலிஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியவை சார்பில் ஜமால் முகமது கல்லூரியில் நடக்கும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இம்முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இளநிலை, முதுநிலை தேர்ச்சி பெற்ற மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து துறை மாணவர்களும், 10-ம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, டிப்ளமோ படித்த அனைத்து மாணவர்களும், பங்கு பெறலாம்.
ஒரு சில நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க ஆர்வமாக உள்ளனர். விருப்பமுள்ள மாணர்கள் தங்கள் சுயவிபரங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு கட்டணம் இல்லை.
நேர்முகத்தேர்வு, துறை சார்ந்த கலந்தாய்வு, தகுதி தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ள மாணவர்கள் தயாராக வரவேண்டும். http://bechrusa.bdu.ac.in/jobfair/முன்பதிவிற்கு மேலே உள்ள லிங்க் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு டாக்டர் பிரேம் ஆனந்த்- 9944943240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO
Comments