திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் சூரிய கிரகண சிறப்பு தொழுகை நடைபெற்றது.
கிரகணத்தை காணும் பொழுது தொழுகைக்கு விரையுங்கள் என நபிகள் நாயகம் கூற்றின்படி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பொதுவாக இஸ்லாமியர்கள் தினமும் ஐந்து முறை தொழுவது வழக்கம். இன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு கூடுதலாக ஒரு முறை முக்கிய பள்ளிவாசல்களில் மாலை 5.20 மணி முதல் 5.40 வரை தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபடட்டனர்.
திருச்சியில் 20க்கும் மேற்பட்ட முக்கிய பள்ளிவாசல்களில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் 20 நிமிடம் சிறப்பு தொழுகை நடத்தினர். முக்கியமாக உலக நன்மைக்காகவும் யாருக்கும் தீங்கு எதுவும் ஏற்பட்ட விட கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் கூற்றுப்படி கிரகண நேரத்தில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவது வழக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments