திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சேகர் – தனலட்சுமி. இருவரும் முசிறியில் நடைபெறும் உறவீனர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வளைகாப்பு முடிந்து மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
அப்போது நாகலாபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இவர்களுக்கு பின்னால் வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதனால் தனலட்சுமி மற்றும் சேகர் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் அடிபட்டதால் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சேகரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் கோயமுத்தூரை சேர்ந்த பூபதி என்பவர் காரை ஓட்டி வந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி கணவன் மனைவி இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments