கடந்த 19.03.2018ந் தேதி திருச்சி காவல் ஆணையரிடம், பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படம் பிடித்து சமூக ஊடங்களில் பதிவேற்றம் செய்ய போவதாக கணவர் மிரட்டுவதாக கொடுத்த புகாரின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து, கரூரை சேர்ந்த எதிரி தேவ்ஆனந்த் 41/23 த.பெ.முத்துக்கருப்பன் என்பவரை கைது செய்யப்பட்டு, கடந்த 20.09.2018-ந் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி JM II நீதிமன்றத்தின் நீதிபதி பாலாஜி விசாரணையை முடித்து நேற்று (10.04.2023)-ம் தேதி, மேற்படி எதிரி தேவ்ஆனந்த் என்பவருக்கு ச/பி 498 (A) IPC ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், ச/பி 354 (D) IPC ன்படி 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், ச/பி 67 IT Act ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும்,

ரூ.1,00,000/- அபராதமும் ஆக (மொத்தம் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,20,000/- அபராதம்) விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1,20,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என நீதிபதி பாலாஜி தீர்ப்பு வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
388
11 April, 2023










Comments