Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

இதை பற்றி நான் பேசுவதற்கே வெட்கப்படுகிறேன் – திருச்சியில் அண்ணாமலை பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணியின் மாநில செயலாளர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த 10 ஆண்டுகளில் எம்.பி, எம்.எல்.ஏ என அனைத்து பதவியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் இருப்பார்கள். அதை  நோக்கி இளைஞர் அணியினர் கட்சிக்கு பணியாற்ற வேண்டும். மக்களுக்காக மண்ணுக்காகவும் வாழ வேண்டும். அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற்று வாழ்க்கையில் பூஜ்ஜியம் ஆகி விடக்கூடாது. பிரதமர் மோடி சலனப்படாதவர். நாம் அனைவரும் சலனப்படக்கூடியவர்கள் என இளைஞர் அணியினரிடம் அண்ணாமலை பேசசினார். காங்கிரஸ் கட்சியில் அனைவரும் தலைவர்கள். பாஜகவில் அப்படி இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொறுப்பு என்றார். மண் மற்றும் மக்கள் நலன் சார்ந்து அக்கறை இல்லாதவர் அரசியலில் பூஜ்ஜியம் ஆகி விடுவார் என பேசினார்.

பின்னார் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை….லாலு பிரசாத் ஊழல்வாதி தான். ஆனாலும் அவர் திறமை வாய்ந்த அரசியல் தலைவர். அவரது மனைவி முதல்வர், மகன் துணை முதல்வர் என குடும்பத்தினரே பதவிகளை ஆக்கிரமித்தனர். ஒருவருடைய அரசியல் வாழ்க்கை மண், மக்கள் நலம் சார்ந்து இருக்க வேண்டும் அவ்வாறு இல்லையெனில் அரசியல் வாழ்க்கை பூஜ்ஜியம் ஆகிவிடும். இதற்கு லல்லு பிரசாத் உதாரணமாகிவிட்டார். தமிழகத்திற்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டார்.

காவி நிறம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதனை பாஜக சொந்தம் கொண்டாடவில்லை. பிஜேபி நிறம் காவிதான் என விசிக தான் கூறி வருகிறது. காவி நிறம் பொதுவானது காவியை நேசிப்பவர்கள் தேசத்தை நேசிப்பவர்கள். ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு. அமைச்சர் பதவியை யாருக்கு வேண்டுமானாலும் வழங்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு. திமுகவில் ஏற்கனவே குடும்ப ஆட்சி தான் என கூறி வருகிறோம். கனிமொழிக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் உதயநிதிக்கும் பதவி வழங்கப்பட உள்ளது. இது  குடும்ப ஆட்சி தான் என்பதை உணர்த்துகிறது என்றார். புயல் நேரங்களில் கண்டிப்பாக விமர்சிக்க விரும்பவில்லை . ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து இது போன்று அதிக புயல்கள் வருகிறது – பேரிடர் மேலான்மைக்கு தமிழக அரசு தனி அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இறையன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் சகோதரர் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போது தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அது போல்  நியமித்து பேரிடர் மேலாண்மை துறைக்கு தனி கவனம் செலுத்த வேண்டும்.

திருச்சியில் திமுக பிரமுகர் ஒருவர் பப் துவங்கி அதில் பெண்களுக்கு மது இலவசம் என்கிறாராம். இதை பற்றி நான் பேசுவதற்கே வெட்கபடுகிறான். அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடியாக மது விற்பனை இருக்கும் அப்போது என்ன செய்ய போகிறோம். மது விலக்கு பா.ஜ.கவிற்கு பிரச்சினையே இல்லை – 10% … 10% மாக டாஸ்மார்கை மூடுங்கள் – அரசு வேறு வழியில் வருவாயை பெற்று கொள்ள வழி வகை செய்து – படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும்.ஒவ்வொரு பட்ஜட்டிலும் 20% மது விலக்கை கொண்டு வாருங்கள் – முதல்வரை நான் பாராட்டுவேன்.

என் பதவியை பற்றி முதல்வர் கூறினாராம். பதவிக்காக அண்ணாமலை செயல்படவில்லை. என்னால் தரையில் படுக்க முடியும், ஆனால் அவரால் அப்படி முடியாது. சூர்யா சிவா விலகும் போது கருத்து தெரிவித்தார் – அவர் கருத்து … விஸ்தாலமான பார்வையில் அவர் பார்த்தால் அவருக்கு அப்படி தெரியாது.அரசியலில் கண்களை கட்டி விட்டு யானை தொடு என்றால்… தும்பிக்கையை பாம்பு என்பார்கள் – சூர்யா சிவாவிற்கு அரசியலை விசாலமாக பார்க்கும் பார்வை இல்லை என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *