Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதாக உணர்ந்தேன் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி… இரண்டாண்டுகள் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடியிருந்த நிலையில் தற்போது தான் அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்ட காலத்தை தற்போது தான் உடைத்துள்ளோம்.

மாணவர்கள் வருங்காலத்தில் இன்னும் அதிகமாக படிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம். தன் நம்பிக்கையை மாணவர்கள் இழந்து விட கூடாது. நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து சட்ட போராட்டங்களையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசிடம் தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடக் கூடாது. நேற்றே தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கூறினேன் நாளை நீட் தேர்வு முடிவுகள் வருகிறது. வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போல் இருக்கிறேன். குழந்தைகளுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை கொடுத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் நம்பிக்கையே இழந்து விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர். 

தயவு செய்து மாணவ செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதை விட்டுவிட்டு உயர்கல்விக்கான முகாம்களை பயன்படுத்தி ஆலோசனை எடுத்து கொள்ளுங்கள் என்றார். பணம் உள்ளவர்களுக்கு ஒரு கல்வி, பணம் இல்லாதவருக்கு ஒரு கல்வி என்ற நிலை தமிழகத்தில் இருக்கக் கூடாது. சமூக நீதி எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். சமூகநீதிக்கும், சமத்துவத்திற்காக தான் இலவசங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றார். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *