திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் நாள்தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர், பெரிய கடைவீதி, சவுராஷ்டிரா தெரு, ராணி தெரு, சின்ன சவுராஷ்டிரா தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் சென்று வாக்கு சேகரித்தார்.

பின்னர் வாக்களார்கள் மத்தியில் பேசி வெல்லமண்டி நடராஜன்…. திமுக கூட்டணி சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தேர்தலுக்குப் பிறகு நீங்களே பார்த்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். பின்னர் அவரை கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு தருகிறேன் என்றும், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தொகுதி பக்கமே வரமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுபோல் தான் தற்போது கிழக்கு தொகுதியில் திமுக அறிவித்துள்ள வேட்பாளர் நீங்கள் பார்க்க முடியாது எனவே அதிமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் உங்களுக்கு வந்து சேருவதற்கும், தொகுதியில் நல திட்டங்கள் தொடர சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
13 Jun, 2025
366
26 March, 2021










Comments