Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

Zomatoவை வாங்க பரிந்துரை செய்கிறது ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ! இலக்கு விலை ரூபாய் 160/-

இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு விநியோக செயலியான சொமேட்டோவை (Zomato) பயன்படுத்தாவர்கள் இருக்க முடியாது. உணவகங்கள் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் தங்கள் சுவையான உணவை வழங்க Zomato சிறந்த வகையில் உதவி செய்கிறது. Zomato ஆன்லைன் வணிகங்களுக்கு நெகிழ்வுத் தன்மையையும் வசதியையும் வழங்குகிறது.

Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் பஞ்சாப்பில் பிறந்து வளர்ந்தவர். டெல்லி ஐஐடியில் கணினி பிரிவில் பட்டம் பெற்றவர். டெல்லியில் ஓர் அலுவலகத்தில் தீபிந்தர் பணிபுரிந்த சமயத்தில், ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மதிய உணவை வழங்க அலுவகத்தில் உள்ள உணவகம் சந்தித்த சிக்கல்களை பார்த்து அதற்கு தீர்வு ஏற்படுத்த முயன்றார்.

அதன் விளைவாக உருவானது தான் இன்றைய சொமேட்டோ நிறுவனம். Zomato நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி இந்திய சந்தையில் பட்டியலிடப்பட்டது. விலைப்பட்டையாக ரூபாய் 72 முதல் 76 என நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.83 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 109.10க்கு வர்த்தகத்தை நிறைவு செய்ததுடன் 52 வார உச்சத்தை தொட்டிருக்கிறது.


Zomato பிப்ரவரி 23ல் இருந்து 120 சதவிகிதம் உயர்ந்துள்ளது,  அடிப்படை பகுப்பாய்வு (வருடாந்திர அறிக்கை பகுப்பாய்வு, உணர்திறன் பகுப்பாய்வு போன்றவை) மற்றும் முதன்மை ஆராய்ச்சி (40 நகரங்களில் உள்ள 220 உணவகங்களில் ஒரு கணக்கெடுப்பு ஆகியவற்றின் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை காணும் எனத்தெரிகிறது.

நிறுவனத்தின் நடுத்தர கால வழிகாட்டல் 4-5% adj. GOVன் விகிதமாக EBITDA Q3FY24E (I-Sec est.: 4.0%); 2) விரைவு வணிகம் EBITDA லாபத்தை Q1FY25E மூலம் அடைய வேண்டும் மற்றும் 3) Hyperpure adj. EBITDA இழப்புகள் Q1FY24 இல் -5.7 சதவிகிதத்தில் இருந்து Q1FY25E ல் -3.2 சதவிகிதமாக குறைக்கப்பட வேண்டும் எனத்தெரிகிறது. ஒரு வருட முன்னோக்கி EV/EBITDA மடங்கு 42x மற்றும் P/E மடங்கு 63xஐக் குறிக்கிறது. மீண்டும் வாங்கும் தேர்வை கொடுக்கிறது.


(Disclimer : கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே முதலீட்டு ஆலோசனை அல்ல. உங்கள் முதலீட்டு ஆலோசகரை கலந்து முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *