திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை மாத சந்தா தொகை ரூபாய் 140 + ஜிஎஸ்டி 18 சதவீத கட்டணத்தில் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரர்கள் தங்களின் விருப்பம் இல்லாமல் ஆபரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலைக் கூறி அரசு செட்டாப் பாக்ஸ் நீக்கம் செய்துவிட்டு தனியார் செட்டாப் பாக்ஸ் மாற்றினால் உடனடியாக 0431-2401881 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் அரசு கேபிள் சிக்னல் தொடர்ந்து எவ்வித தடையும் இன்றி செயல்படும் என்பதை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments