இந்திய அளவில் நடைபெற்ற 73வது மல்யுத்த போட்டியில் 73 ஆண்டுகளில் இதுவரை யாரும் வாங்காத தங்கப்பதக்கத்தை வென்ற தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்த தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஹரிகிருஷ்ணனை, மத்திய மண்டல காவல்துறை தலைவர் நேரில் அழைத்து பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய அளவில் நடைபெற்ற 73வது மல்யுத்த போட்டி செப்டம்பர் 10ம் தேதி முதல் உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 38 மாநிலங்களிலிருந்து மத்திய மாநில காவல்துறையினரும், தமிழக அளவில் 93 காவல் துறையினரும் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் 51 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு மல்யுத்தப் போட்டியில் இந்திய அளவில் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்று தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் 2017ம் ஆண்டு காவலர் தேர்வில் வெற்றி பெற்று தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பள்ளி மற்றும் கல்லூரி பருவத்திலேயே மல்யுத்தத்தில் ஆர்வம் அதிகம். இதனால் அவர் மாவட்ட மாநில அளவில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் அவர் கலந்து கொண்ட பல போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடந்த இந்தப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் எந்த காவல் துறையினரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவலர் ஹரிகிருஷ்ணன அவரது வெற்றியை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் க.கார்த்திகேயன் நேரில் அழைத்து பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments