கடந்த 03.12.2015-ஆம் தேதி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழபுலிவார்டு ரோடு பகுதியில் வசித்து வந்த நபரை, அவரது கணவர், இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கொடுமைபடுத்தியும், குற்றங்கருதி மிரட்டல் விடுத்ததாக திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த புகாரின்பேரில் நீதிமன்ற ஒப்புதல் பெற்று கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து எதிரிகள் மீது கடந்த 07.12.2015 ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி மணிவாசகன் விசாரணையை முடித்து வைத்தார். இதில் எதிரி-1க்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும்,
எதிரி-2க்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து மேற்படி இரண்டு எதிரிகளையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில்அரசு வழக்கறிஞர் கரிகாலன் ஆஜரானார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
Comments