Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் – மாநகர காவல் ஆணையர் தகவல்

சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் பதற்றமடையாமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. மேலும் பொதுமக்களுக்கு இதுசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் திருச்சி மாநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 96262 73399 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு (Child Help line) எண்.1098, பெண்கள் பாதுகாப்புக்கு உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் குழந்தை கடத்தல் தொடர்பான பொய்யான செய்திகளை பரப்புவோரை பற்றிய தகவல் தெரிந்தால், அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *