முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி இராவணன் சிலம்பம் அகாடமி சார்பாக 100 மாணவர்கள் 100 மணி நேரம் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்வு பொன்னையா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்த அமைப்பில் பயிற்சி பெறும் 100 சிறுவர்கள் 100 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்வு கடந்த 3-ம் தேதி மாலை துவங்கியது
இதில் 6 வயது முதல் 21 வயது வரை உள்ள அனைவரும் வெவ்வேறு பிரிவுகள் வாரியாக ஒவ்வொரு குழுவினரும் 3 முதல் 8 மணி நேரம் வரை தொடர்ந்து 100 மணி நேரம் சிலம்பு சுற்றினர். இந்த சாதனையை நேற்று மாலை 8.23 மணி அளவில் சிறுவர்கள் நிறைவு செய்தனர்
தொடர்ந்து ஐந்து நாட்களாக சிலம்பம் சுற்றிய சிறுவர்களை திருச்சி தெற்கு மாவட்ட பாலக்கரை பகுதி அமைப்பாளரும், ராவணன் சிலம்பம் அகாடமி வாத்தியார் இலக்கிய தாசன், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் சிறுவர்களை உற்சாகப்படுத்தினர்.
நிறைவு நாளில் வான வேடிக்கையுடன் நிறைவு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 100 சிறுவர்கள் 100 மணி நேரம் சிலம்பம் சுற்றிய உலக சாதனை நிகழ்வு Nobel world record புத்தகத்தில் இடம் பெற்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments