தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுடன் வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கி தற்பொழுது விறுவிறுப்பாக வாக்குகளை வாக்காளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு மணி நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 41.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் மணப்பாறை தொகுதியில் 38.90 சதவீதமும், ஶ்ரீரங்கம் தொகுதியில் 42.02 சதவீதமும், திருச்சி மேற்கு தொகுதியில் 39.04 சதவீதமும், திருச்சி கிழக்கு தொகுதியில் 38.50 சதவீதமும், திருவெறும்பூர் தொகுதியில் 43.47 சதவீதமும், லால்குடி தொகுதியில் 44.20 சதவீதமும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 45.16 சதவீதமும், முசிறி தொகுதியில் 44.33 சதவீதமும், துறையூர் தொகுதியில் 41.83 சதவீதமும் பதிவாகியுள்ளது.
மேலும் 9 சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 49,3747, பெண் வாக்காளர்கள் 48,45,41, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5 பேர் என மொத்தம் 97,82,93 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய! https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments