திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் (79). இவரது மனைவி பாப்பம்மாள் (75) கணவன் – மனைவியான இருவரும் ஒரு ஆஸ்பெட்டாஸ் வீட்டில் வசித்து வரும் நிலையில் இன்று பாப்பாம்மாள் வீட்டில் காலை உணவு சமைத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது எரிவாயு குழாயில் கசிவாயு ஏற்பட்டு சிறிது நேரத்தில் திடீரென தீப்பற்றி எரியவே சமையல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாப்பம்மாளுக்கு முகம் மற்றும் கையிலும், ரங்கராஜுக்கு காலிலும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் வலி ஏற்பட்டு இருவரும் சப்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையம் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ உடனே அணைந்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments