திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்காக கோடை காலத்துக்கு குடிநீர் டேங்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு இந்த தண்ணீர் டேங்க் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டது. கத்தரி வெயில் காலத்தில் பயணிகள் குடிநீருக்கு தவிப்பார்கள் என்ற எண்ணத்தில் மாநகராட்சி இந்த தண்ணீர் தொட்டி வைத்தது. ஆனால் இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பபடுவதில் என அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், பயணிகளும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். மாநகராட்சி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும். குடிநீர் என்ற பெயருடன் மட்டுமே உள்ள இந்த தண்ணீர் தொட்டி யார் தாகத்தையும் தீர்க்காது என்று அப்பகுதி மக்களின் புலம்பலாக உள்ளது.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments