தமிழ்நாடு அரசு பணியார் தேர்வாணையத்தால். நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நில அளவி மற்றும் வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் / உதவி வரைவாளர் பதவிகளுக்கான போட்டி தேர்வு 06.11.2022 வரை தடைபெறவுள்ளது. திருச்சிராப்பள்ளி. மாவட்டத்தில் 3960 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர்.
இத்தேர்விற்கு12 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள இயங்குக்குழு (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளரும் இயங்குவர். மேலும் 12 தேர்வு மையத்திற்கு 12 தேர்வு கூட ஆய்வு அலுவலர்களும், 13 வீடியோகிராபரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வார்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு: பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு. பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்விடை பேசி உள்ளிட்ட எவ்வித மிண்ணனு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments