திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் மாநில உணவக மேலாண்மை தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் உணவு தயாரிப்பு மற்றும் உணவக மேலாண்மை சார்ந்த இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
உணவக மேலாண்மை மற்றும் உணவு தயாரிப்பு படிப்புகள் மற்றும் அதற்கான வேலை வாய்ப்புகள், தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோஸ்ட் கிளப் நாளை (15.03.2024) கல்லூரி வளாகத்தில் துவங்க உள்ளது.
இந்த துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் பெனுகுண்டா தலைமையில், கல்லூரியின் முன்னாள் முதல்வர் பொன்இளங்கோ முன்னிலையில், பிரபல சமையல் கலை வல்லுநர் தாமு மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் நெல்சன் கலந்து கொண்டு போஸ்ட் கிளப்பை துவக்கி வைக்க உள்ளனர்.
இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. உணவக மேலாண்மை மற்றும் உணவு தயாரிப்பு படிப்புகளின் அவசியம், வேலை வாய்ப்புகள், எதிர்காலத்தில் இந்தத் துறையின் வளர்ச்சிகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கோஸ்ட் கிளப் துவங்கும் உள்ளதாகவும், உணவக மேலாண்மை மற்றும் உணவு தயாரிப்பு துறை சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது முதல் பணியில் அமர்வது வரை உள்ள சந்தேகங்களை தீர்க்கவும், வழிகாட்டுதல், பயிற்சிகள் ஆகியவை இதன் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என கல்லூரியின் முன்னாள் முதல்வர் பொன்இளங்கோ தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments