மதுரை திருப்பரங்குன்றம் மாணிக்கம் ராமசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறந்த வெளி அரங்கம் திறப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் முதல் நிகழ்வாக திறந்த வெளி அரங்கத்தை மாணிக்கம் ராமசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர் பேராசிரியர் டி.கலைச்செல்வன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அக்கல்லூரி முதல்வர் முனைவர் ம.பத்மாவதி வரவேற்க கல்லூரியின் இயக்குநர் தலைமையுரை ஆற்றினார். தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் முதல்வர் முனைவர் செல்வலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
அரங்கத்தின் முதல் நிகழ்வாக அக்கல்லூரியின் உளவியல் துறை மாணவி இரதி மாலாவின் பரதமும் திருவனந்தபுரம் சமுத்ரா கலைக்கூடத்தின் களரியும் செந்தமிழர் தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளி மாணவர்களின் சிலம்பமும் நிகழ்த்தப்பட்டது. விழாவின் நிறைவில் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் அமலநாதன் நன்றி வழங்கினார்.
தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பா.இரேவதி மற்றும் காட்சி தொடர்பியல் துறை பேராசிரியர் பாபு ஷாஜன் கெவின் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்த ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் கே.சசிரேகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
379
17 June, 2023










Comments