திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு பர்மா காலணி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட புனித செபஸ்தியார் ஆலயத்தினை திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் மேதகு முனைவர் .S.ஆரோக்கியராஜ் அர்ச்சிப்பு ஜெபம் செய்து ஆலயத்தை புனிதப்படுத்தினார். இந்நிகழ்வில் ஆலயபங்குத்தந்தை அருட்திரு. சகாயராஜ் அவர்களும், ஆலய கமிட்டி உறுப்பினர் அலங்காரம் மற்றும் ஆலயகமிட்டியினர் இறைமக்கள் கலந்துகொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments