இபிஎஸ் ஆதரவாளரும், சேலம் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளருமான இளங்கோவனுக்கு சொந்தமான முசிறி அருகே உள்ள எம் ஐ டி விவசாய பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிபிஎஸ்சி பள்ளி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
திருச்சி முசிறி, ஜம்முநாதபுரம் பகுதியில் உள்ள எம் ஐ டி கல்லூரியில் நள்ளிரவில் வருமானவரித்துறை அதிகாரிகள் புகுந்தனர். அப்போது கல்லூரி உள்ளே இருப்பவர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என உத்தரவிட்டு காலை முதல் வருமான வரி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த கல்லூரியின் தலைவர் இளங்கோவன் இவருடைய சம்பந்தி வீட்டில் கோயம்புத்தூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதையடுத்து இங்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் எம்ஐடி வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக், மகளிர் கல்லூரியில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments